கொரோனா வைரஸ் உலகை முடக்கிப்போட்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே திண்டாடி வருகின்றன. நோயை கட்டுப்படுத்த மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்கள். கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது.
எளியவர்கள் பலருக்கு வெளியில் நடமாட முடியாத சூழல் இருப்பதால், எந்த ஒரு பணியும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதனால் நம் நாட்டிலும் பெருமளவு ஏழைகள் உணவிற்கே திண்டாடும் நிலையும் உருவாகி வருகிறது. பிரபலங்கள் சிலர் தங்களால் முடிந்த அளவிற்கு பொது மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா உதவி செய்துள்ளார். தனது சொந்த செலவில் L.F.E.அமைப்பு மூலமாக 5 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை மாவு, சாம்பார் பருப்பு ஆகிய பொருட்களை, 250 குடும்பங்களுக்கு கொடுத்து உதவியுள்ளார் சாய் தீனா.