கோலாலம்பூர்: மலேசியாவில் இப்போது நான்கு கூடுதல் இடங்கள் ஆரஞ்சு மண்டலங்கள் அல்லது கோவிட் -19 ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அவை சிவப்பு மண்டலங்களுக்கு கீழே ஒரு படியாகும் என்று சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலாங்கூரில் சிப்பாங் மற்றும் கோலசிலாங்கூர் மாவட்டங்கள், மலாக்காவில் உள்ள அலோர் காஜா மாவட்டம் மற்றும் சரவாக் கோத்தா சமரஹன் மாவட்டங்கள் என கூடுதலான நிலையில், இப்போது ஏப்ரல் 2 மதியம் வரை மொத்தம் 20 ஆரஞ்சு மண்டலங்கள் உள்ளன.
சுகாதார அமைச்சின் சொந்த வரைபடங்களில் உள்ள வரையறையின்படி, ஆரஞ்சு மண்டலங்கள் 20 முதல் 40 சம்பங்கள் பதிவு செய்யப்பட்ட மாவட்டங்களாகும்.