கொரோனா போன்ற மஞ்சள் காய்ச்சல் வைரஸ் 1797ல் தள்ளாடிய அமெரிக்கா

கோலாலம்பூர், ஏப்.5-

கொரோனா வைரஸைக் காட்டிலும் கொடிய மஞசள் காய்ச்சல் நோய்த்தொற்று கிருமிகளால் அமெரிக்கா 130 ஆண்டுகள் சிக்கித் தவித்தது.

1797இல் அமெரிக்க அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் பொறுப்பேற்றிருந்த சமயம் அது.

பிலடெல்பியா அப்போது அமெரிக்காவின் தலைநகரமாக இருந்தது.

நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் நூறு பேராவது சாலைகளில் நடந்து கொண்டிருக்கும்போதே சுருண்டு விழுந்து இறந்தனர்.

வெளியூரிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான கார்கள் கொளுத்தப்பட்டன. வர்த்தகம் முற்றிலுமாக தகர்ந்து போனது.

என்ன செய்வது என்று தெரியாமல் அரசு விழி பிதுங்கி நின்றது.

அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் உயிருக்குப் பயந்து பிலடெல்பியாவை விட்டு வெளியேறினார்.

செய்வதறியாது மக்கள் திகைத்தபோது பெஞ்சமின் என்ற மருத்துவர் தொடர் ஆய்வுகள் நடத்தி மக்களைத் தாக்குவது மஞ்சள் காய்ச்சல் வைரஸ் என்பதைக் கண்டுபிடித்தார்.

அதற்கான தடுப்பூசியையும் அவர் கண்டுபிடித்தார். இவரது கண்டு பிடிப்பு வருவதற்குள் சுமார் ஆறு லட்சம் உயிர்கள் பலியாகி விட்டன. வாஷிங்டன் தலைநகராகவும் மாறி விட்டது.

சுமார் 130 ஆண்டுகளுக்குப் பிறகே மஞ்சள் காய்ச்சல் வைரஸ் அமெரிக்காவை விட்டு முற்றிலுமாக நீங்கியது.

தற்போது அதே போன்றதொரு தாக்கத்தை கொரோனா வைரஸ் அமெரிக்காவில் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here