காஜாங் வட்டாரத்தில் கண்காணிப்பு தீவிரம்

காஜாங், ஏப்.5-

காஜாங் போலீசாரும் காஜாங் நகராண்மைக் கழகமும் இணைந்து இங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

காஜாங் நகரைச் சுற்றியுள்ள 34 இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ஸாபிர் முகமட் யூசோப் அறிவித்துள்ளார்.

நகர சந்தையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறைந்து வருகிறது.

பாசார் தானி எனப்படும் விவசாய சந்தையிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

மீன்கள், இறால், நண்டு போன்றவை விற்பனையாகும் ஈரச்சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

பொதுமக்கள் அதிகமாகக் கூடுவதை நாம் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.

ஒரு நேரத்தில் 40 பேர் மட்டுமே நகர சந்தைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். சமூக இடைவெளியை காஜாங் மக்கள் அமல்படுத்துவதில் அலட்சியம் காட்டக் கூடாது என ஸாபிர் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here