15 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை – கால்பந்து பயிற்றுவிப்பாளர் கைது!

கோத்தா திங்கி:

ண்டை வீட்டுச் சிறுவனை ஓரினச்சேர்க்கை செய்ததோடு அவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 50 வயது மதிக்கத்தக்க கால்பந்து பயிற்றுவிப்பாளர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சோங் செடிலியில் (Tanjung Sedili) உள்ள காம்போங் கெம்புட் பகுதியில் உள்ள ஒரு குடிசையில் கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன், இச்சம்பவம் நடந்த மறுநாளே தானாக முன்வந்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற அதே நாளில், அதே கிராமத்தில் வைத்து அந்தப் பயிற்றுவிப்பாளரைப் போலீசார் கைது செய்தனர் என்று, கோத்தா திங்கி மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன் யூசுப் ஒஸ்மான் கூறினார்.

சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட சிறுவனும் அண்டை வீட்டுக்காரர்கள் ஆவர். இச்சம்பவம் முதல்முறையாக நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபருக்கு இதற்கு முன்பு எவ்விதக் குற்றப் பின்னணியும் இல்லை. இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377C-இன் கீழ் (சம்மதமின்றி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுதல்) விசாரிக்கப்படுகிறது.

சந்தேக நபர் கடந்த நான்கு நாட்களாகப் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சிறுவர்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் குற்றங்கள் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here