வாழ்வா… சாவா… இன்று முதல் வரும் 7 நாட்கள்

புத்ராஜெயா, ஏப்.6-

நாட்டில் கோவிட்-19 தொற்று உச்சம் அடையக்கூடய காலம் இதுதான். எனவே மக்கள் அனைவரும் அடுத்த 7 நாட்களுக்கு கூடுதல் கவனமாக இருத்தல் அவசியம் என மனித வளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவுறித்தினார்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு இவ்வாரத்தில் அதிகமாக தெரியக்கூடும் என கூறப்படுகின்றது.

அதிலும் இந்த தொற்று நோய் பிடிக்கப்பட்டவர்கள் என்று நம்பப்படும் 40,000 பேர் இன்னமும் வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர் என காவல்படைத் தலைவரும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நமது உடல் நலத்தை பாதுகாக்கும் பெரும் கடமை நமக்கு உள்ளது. அதன் அடிப்படையில் முடிந்த வரை இவ்வாரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக தவிர வெளியே செல்ல வேண்டாம்.

அரசாங்கம் நடமாட்ட தடை உத்திரவை பிரப்பித்துள்ள போதிலும் மக்கள் வெளியே சென்றுதான் வருகின்றனர். குறிப்பாக சந்தைக்கு (பசார்) செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். முடிந்தவரை அங்கு செல்வதையும் குறைத்துக் கொள்ள வேண்டும் என கூறி அவர் குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் தேவையற்ற காரணங்களுக்காக அடுத்தவரை சந்திக்காமல் இருப்பதே இச்சூழ்நிலையில் நல்லது. ஒருவருக்கு இந்நோய் தொற்று கண்டிருப்பதை நாம் பார்த்து அறிந்து கொள்ள முடியாது.

அதுவும் இத்தொற்று சாதாரண காய்ச்சல் போல் இல்லாமல் ஒருவரிடமிருந்து மற்றொருக்கு எளிதில் பரவக்கூடியதாகும். இதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகையால், இந்த ஒரு வாரக் காலக்கட்டத்திற்கு நாம் பாதுகாப்பு அம்சங்களுக்கு வழக்கத்தை விடவும் அதிக முக்கியதுவம் கொடுத்து அந்நோய் தொற்று பரவுவதை தடுக்க வேண்டும் என்றும் மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here