கார்களைத் தொடுதல் கூடாது!

கோலாலம்பூர், ஏப்ரல் 5 –

சாலைத் தடுப்புகளில் சோதனையிடும் போலீஸ்காரர்கள் இடைவெளியைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதை உறுதிசெய்துகொள்ளுமாறு மலேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹமீட் படோர் தெரிவித்திருக்கிறார்.

ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துவரும் சாலைத் தடுப்பு போலீஸ்காரார்களின் பாதுகாப்பு குறித்தும் கண்காணிக்கப்பட்டு, அன்றாட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
சந்தேகத்தின் பேரின் இன்னும் 40 ஆயிரம் நபர்கள் தேடப்படுகின்றனர்.

அவர்களில் பலருக்கு கோவிட் 19 இருக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை. அவர்கள் சாலையைக் கடக்கின்றவர்களாவும் இருக்கலாம். அதனால் பாதிக்கப்படுகின்றவர்கள் போலீஸ்காரர்களாகத்தான் இருப்பார்கள்.

போலீஸ்காரர்கள் 33 பேர் பாதிக்கப்பட்டிருப்பதும் அவர்களின் குடும்பத்தினர் 750 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதையும் ஓர் உதாரணமாக அவர் எடுத்துக் கூறினார்.

சாலைத்தடுப்பில் ஈடுபட்டிருக்கும் போலீசார் பயணிகளின் கார்களைத் தொட்டுப் பேசுவதும் தவிர்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here