மக்கள் நடமாட்டக் குற்றம் மீறல் கட்டுப்படவில்லை!

எம்சிஓ
கோப்பு படம்

ஜோகூர் பாரு, ஏப்ரல் 6- 

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) மீறியதற்காக 901 பேர் செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ அயூப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையில் கடந்த 5ஆம் தேதி வரை 48 புதிய பதிவுகள் அடங்கியுள்ளன, கைதானவர்கள் 19 முதல் 66 வயதுக்குட்பட்டவர்களாவர் என்றார் அவர்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186, தொற்று நோய் தடுப்புக் கட்டுப்பாடு 1998 (சட்டம் 342) இன் பிரிவு 22 (பி), தொற்று நோய்களைத் தடுக்கும், கட்டுப்படுத்தும் விதி 3 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. கோவிட் -19 பரவுவதைத் தவிர்க்க அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் கட்டுப்படவும் வேண்டுமென அயோப் கேட்டுக்கொண்டார்.

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பொறுத்தவரையில் அதிகமான மக்கள் ஒத்துழைப்பை போலீஸ் எதிர்பார்க்கின்றது. அதன் இரண்டாம் கட்டத்திற்கு கீழ்ப்படியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

விசாரணைகள், தகவல்களைக் கொண்டவர்கள் மாநில போலீஸ் விரைவு எண் 07-2212999 அல்லது அருகிலுள்ள காவல் நிலையங்களைத் தொடர்பு கொள்ளுமாம் போலீஸ் அதிகாரி அயோப்கான் மைடின் பிச்சை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here