வர்த்தகத்தடைப் பட்டியலில் உள்ள நிறுவனத்திடமிருந்தே மருத்துவ உபகரணங்களைப் பெற்ற அமெரிக்கா

நியூயார்க் –

கொரோனா தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் அமெரிக்காவுக்கு உதவ புடின் முன்வந்தார்.

இதற்காக செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் மிகப்பெரிய சரக்கு விமானம் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில், 2014, 2015ஆம் ஆண்டுகளில் உக்ரேன், கிர்மியா விவகாரங்களின் போது அமெரிக்கா அரசு ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத்தடைகளை விதித்தது.
ரஷ்யாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் தடை விதித்தது. மேலும் உலகின் பல்வேறு நாடுகளையும் ரஷ்ய நிறுவனங்களோடு வர்த்தகம் செய்யவேண்டாம் என அறிவுறுத்தியது.

தாங்கள் விதித்த தடைகளை மீறி ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளும் பொருளாதாரத்தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்கா ரஷ்ய நிறுவனங்கள் மீது விதித்த வர்த்தகத்தடைகள் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

நியூயார்க் நகருக்கு ரஷ்யா அனுப்பிய மருத்துவ உபகரணங்களில் வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவி அமெரிக்காவின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள நிறுவனத்தின் தயாரிப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

யூபிசெட் என்ற அந்த நிறுவனத்தை கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா தனது வர்த்தக தடைப்பட்டியலில் வைத்துள்ளது. ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்காவுக்கு வழங்கிய மருத்துவ உபகரணங்களில் செயற்கை சுவாசக்கருவி யூபிசெட் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here