முகக் கவசங்கள் முறையாக வீசப்படுகிறதா?

கோலாலம்பூர், ஏப்ரல் 8-

அணிந்தபின் வீசப்படுகின்ற முகக்கவசங்களால் ஆபத்து இருக்கிறது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

நாட்டில் விற்பனையில் இருக்கும் முகக் கவசங்கள் பயன்படுத்திய பின் வீசப்படுகின்ற வகையில் தயாரிக்கப்பட்டவை, இவற்றைப் பயன்படுத்தியபின் குப்பைத் தொட்டியில் போடுகின்றவர்களே அதிகம். குப்பைத் தொட்டியில் போடுகின்ற முகக்கவசங்கள் பாதுகாப்பனவையல்ல.

இம்முகக்கவசங்களைக் குப்பைத்தொட்டியில் இருந்து சேகரிக்கும் பணியார்கள் அதைத் தொடாமல் எடுக்க முடியாது. கையுறை அணிந்திருந்தாலும் பாதிப்பு என்பதைத் தவிர்ப்பது மிகக் கடினமானது.

மலேசியாவில் முகக்கவசம் தயாரிக்கப்படுமானால் பல வகைளைத் தயாரிப்பதற்கு முனைய வேண்டும் என்று பயனீட்டாளர்கள் பலர் தங்கள் அனுபவங்களைத் தெரிவித்தனர்.

அணிந்தபின் துவைத்துப் பயன்படுத்துவது என்பது மருத்துவப் பயன்பாட்டிற்கு ஏற்புடையது அல்ல என்றும் கருத்து நிலவுகிறது. துவைத்தபின் பயன்படுத்தப்படுவது சாதாரணப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.

மருத்துவம், மருத்துவப் பாதுகாப்பு என்பதற்கு வேறு வகை என்று இருந்தாலும் மருத்துவமனை பயன்பாடுகளில் மட்டுமே வீசப்பபடுவது முறையாகக் கையாளப்படுகிறது என்கின்றனர்.

பொதுமக்கள் பயன்படுத்தும் முகக்கவசங்கள் தாறுமாறாகவே வீசப்படுவதாக பலர் கூறுகின்றனர். கிருமித் தொற்றுகள் இதன் மூலமும் பரவக்கூடும் என்பதால் மக்கள் மிகக் கவனமாக இருக்கும் வழிகளை சுகாதாரப்பிரிவு, ஊடகம் வழி விளம்பரப்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர்.

வீசப்படுமுன் வீட்டிலேயே அவற்றைப் பாதுகாப்பாகக் கையாளும்முறை தொலைக்காட்சிகளின் இடைவேளையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here