பெட்டாலிங் ஜெயா, ஏப். 9-
பருவமழையில் சிக்கிய ஒரு நாய்க்குட்டியை காப்பாற்றிய காவல்துறை அதிகாரி ஒருவர் மலேசியர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளார்
அந்த நாய்க்குட்டி மீட்கப்பட்ட ஒரு நிமிட வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
பெயரிடப்படாத போலிஸ் அதிகாரியான அவர், வடிகாலில் விழுந்த நாய்க்குட்டியை மீட்டு, அதன் உறவுகளிடம் சேர்த்தார். கரையின் மேலே நின்று கொண்டிருந்த இரு பெரிய ஜீவன்கள் இதைக் கவனித்துக்கொண்டிருந்தன. மேற்பரப்புக்கு கொண்டுவந்ததும் நன்றியுடன் வாலாட்டின. காவல்துறை அதிகாரி வடிகால் வெளியே வந்தபோது, அவ்விரண்டும் அவரை நெருங்கி வந்தன..
வியாழக்கிழமை (ஏப்ரல் 9) முக நூலில் எஸாம் பின் ராம்லி பதிவேற்றிய இந்த வீடியோ, மூன்று மணி நேரத்திற்குள் 114,000 பார்வைகளையும் கிட்டத்தட்ட 9,000 விருப்பங்களையும் பெற்றுள்ளது.
அவர் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு முன்னோடியாத் திகழ்கிறார் அந்தப்போலீஸ்காரர். ஒரு நாய்க்குட்டி என்றாலும், அது ஓர் உயிர் படைப்பு. நாய்க்குட்டியின் பாதுகாவலர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள. ஆனால் இதுவரை எந்த பதிலும் அவரிடமிருந்து கிடைக்கவில்லை.
சமூக ஊடகங்களில் மலேசியர்கள், காவல்துறை அதிகாரியின் தன்னலமற்ற சைகையைப் புகழ்கின்றனர். போலிஸ் படையின் புகழை உயர்த்தியுள்ளீர்கள் என்றும் பாராட்டி வருகின்றனர்.