கெரிக் பேருந்து விபத்து: விசாரணைக்கு உதவ ஒரு டேஷ்கேம் உரிமையாளர் முன்வந்தார்- போலீஸ்

ஈப்போ:

ஜெலி-கெரிக் நெடுஞ்சாலையின் 53வது கிலோமீட்டரில் 14 UPSI மாணவர்கள் மற்றும் ஓட்டுநரின் உயிரைப் பறித்த துயரமான பேருந்து விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஒரு டேஷ்கேமின் உரிமையாளர் முன்வந்துள்ளார்.

டேஷ்கேமின் உரிமையாளரின் வாக்குமூலம் விரைவில் பதிவு செய்யப்படும் என்று பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நூர்டின் கூறினார்.

மேலும் “காட்சிகளை மறுபரிசீலனை செய்வதை விசாரணை அதிகாரியிடம் விட்டுவிடுகிறோம்,அத்தோடு டேஷ்கேமின் உரிமையாளரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வோம்,” என்று அவர் இன்று ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் சந்தித்தபோது செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில் டேஷ்கேம் காட்சிகள் – இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன – எனவே விபத்துக்கான காரணத்தை தீர்மானிப்பதில் முக்கியமான ஆதாரங்களை இந்தக் காட்சிகள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here