என்னுடன் 6 பேர் பயணித்தனர் – கொரோனாவால் உயிரிழந்த வெளிநாட்டு பயணி

தமிழகத்தின் ஈரோட்டில் தாய்லாந்தை சேர்ந்தவர் கொரோனவால் உயிரிழப்பதற்கு முன்னர் மரண வாக்குமூலம் அளித்த நிலையில் மாவட்டத்தில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 834 ஆக உயர்ந்துள்ளது. ஈரோட்டில் 53 பேருக்கு கொரோனா நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஐந்தாவது சம்பவம் ஈரோட்டில்தான் ஏற்பட்டது. அங்கு 75 வயது நபர், ஐஆர்டி மெடிக்கல் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 21ஆம் தேதி அவர்  டில்லியில் இருந்து ஈரோடு வந்துள்ளார்.

இவருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் வரிசையாக பலருக்கு அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் 6வது சம்பவம்  அதே நாளில் ஈரோடு வந்த தாய்லாந்து பயணி ஆவார். இவர்கள் இருவர் மூலம் பலருக்கு வரிசையாக கொரோனா பரவி இருக்கிறது.

HOW TO TRAVEL FIRST TIME IN FLIGHT ✈ MY JOURNEY (BANGALORE TO ...

இதில் ஈரோட்டில் ஏற்பட்ட தாய்லாந்து பயணியின் சம்பவம்  தான் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்போடு சிகிச்சை பெற்று வந்த அந்த தாய்லாந்து பயணி சிகிச்சை பலனின்றி பலியானார்.

இவர் தன்னுடைய மரணத்திற்கு முன் முக்கிய வாக்குமூலம் ஒன்றை கொடுத்தார். அவர், தான் சந்தித்த ஆட்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டார். தமிழகத்தில் தான் ஒரு வாரத்தில் எங்கு எல்லாம் சென்றேன் என்பதை பட்டியலிட்டார். யாரை எல்லாம் சந்தித்தேன் என்பதை தன்னுடைய மரணத்திற்கு முன் விளக்கமாக கொடுத்தார். இதில் அவர் சொன்ன மிக முக்கியமான விஷயம், தமிழகத்திற்கு நான் மட்டும் வரவில்லை. என்னுடன் மேலும் 6 பேர் வந்து இருக்கிறார்கள். எல்லோரும் தாய்லாந்தை சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லோரும் ஈரோட்டில் இருக்கிறார்கள் என்று கூறினார்.

நேற்றுதான் 28 பேருக்கு கொரோனா வந்தது. முக்கியமாக டில்லி மாநாடு காரணமாக அங்கு பெரிய அளவில் கொரோனா ஏற்படவில்லை. எனினும் அங்கு டில்லி மாநாடு சென்றவர்கள் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதை எல்லாம் சேர்த்து நேற்று மொத்தம் புதிதாக 28 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

இது போக மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா ஈரோட்டில் ஏற்பட்டது. இவர் மூலம் 3 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இந்த மருத்துவர் சிகிச்சை பார்த்த நபர்களுக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதன்படி தாய்லாந்து பயணிகள், டெல்லி கூட்டம் மற்றும் மருத்துவர் மூலம்தான் ஈரோட்டில் மொத்தமாக 53 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here