‘கெமாஸ்’ ஊழியர்களுக்கு நிரந்தரப் பணி மற்றும் புதிய சம்பளத் திட்டம்: துணைப் பிரதமர் உத்தரவு!

கோலாலம்பூர்:

சமூக மேம்பாட்டுத் துறையின் (Kemas) ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைக் ஒப்பந்த அடிப்படையில் வைத்திருக்காமல், அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிப்பதற்கு வழிவகுக்கும் புதிய சேவைத் திட்டத்தைத் தயாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

துணைப் பிரதமரும் கிராமப்புற மற்றும் பிராந்திய வளர்ச்சி அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இன்று நெகிரி செம்பிலான் மாநில அளவிலான ‘ஹரி கெமாஸ்’ மற்றும் ‘ஆல்ஃபா ஜென் டேலன்ட்’ (Alpha Gen Talent @Kemas) நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய துணைப் பிரதமர், கெமாஸ் இயக்குநர் ஜெனரல் டத்தோ முகமட் ஹனாஃபியா மானிடம் அனைத்து கெமாஸ் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் அதிக சம்பளம் மற்றும் ஈர்க்கக்கூடிய சலுகைகளுடன் கூடிய புதிய சேவைத் திட்டத்தை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுச் சேவைத் துறையால் (JPA) தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள திட்டத்தில் கெமாஸ் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இனி அனைத்துக் கெமாஸ் பணியாளர்களுக்கும் நிரந்தரப் பணி நியமனம் வழங்கப்படுவதை இயக்குநர் ஜெனரல் உறுதி செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கை தற்போது நடைபெற்று வரும் நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரத்தோடு தொடர்புடையது அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கெமாஸ் நிறுவனம் கடந்து வந்த பாதையையும் அதன் சாதனைகளையும் அமாட் ஜாஹிட் வெகுவாகப் பாராட்டினார்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here