பெட்டாலிங் ஜெயா, ஏப்.12-
சுங்கை பூலோ பழைய மருத்துவமனைக்கு 100 படுக்கைகளையும் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு 50 படுக்கைகளையும் ராஜா பெர்மாய்சுரி அகோங் துங்கு அஸிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா நன்கொடையாக அளித்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
சுங்கை பூலோ புதிய மருத்துவமனை அருகிலேயே பழைய மருத்துமனையும் இருக்கிறது. ரவாங் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, சாலைக்கட்டணம் செலுத்தியவுடன் கண்ணெதிரிலேயே மருத்துவமனை தெரியும். இதன் அருகில் இடதுபுறம் திரும்பினால் பழைய மருத்துமனை வந்துவிடும்.
1935 ஆண்டுவாக்கில் இம்மருத்துவமனை கட்டப்பட்டதாக செய்து இருக்கிறது. அதன் தோற்றமும் அழகாகவே காணப்படுகிறது, பேணபட்டுவருவதைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம்.
இம்மருத்துவமனை தொழுநோய் வைத்தியத்திற்கு சிறந்த மருத்துவமனையாக விளங்கியது என்பது இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. இதில் இரண்டாயிரத்திர்கும் அதிகமான தொழு நோயாளிகள் சிகிச்சைப்பெற்று குணமடைந்திருக்கின்றனர் என்பது வரலாறு.
ஆனாலும் இந்த மருத்துவமனையின் புறத்தோற்றாம் மாறாமல் இன்னும் பாதுகாக்கப்பட்டே வருகிறது. சில நீண்டநாள் நோயாளிகள் அங்குதான் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அங்குள்ள இயற்கைச் சூழல் மிக ரம்மியமானது, அதனாலேயே நோய்கள் விரைந்து குணமாகிவிடும் என்றும் கூறுகின்றனர். இது உண்மையும் கூட.
இப்போது தொழுநோயாளிகள் மிகக்கணிசமாகவே இருக்கிறார்கள். இவர்களுக்குபின் இந்நோய் வெளி நோயாளிக்கானதாகவே ஆகிவிடும் அளவுக்கு தொழுநோய் சிகிச்சை பரந்த முன்னேற்றம் அடைந்துவிட்டது.
அந்த மருத்துவமனை இடம் ஆங்கிலேயர் கால பாணியில் கட்டப்பட்டிருந்தாலும் இன்றளவும் மிக உறுதியாகப் பராமறிக்கப்பட்டே வருகிறது.
இந்த மருத்துவனைக்கு பேரரசியார் மருத்துவப் படுக்கைகள் வழங்கியிருப்பது குறித்து பரவலாகப் பகிரப்பட்டுவருகின்றன.
. ஏப்ரல் 11 ஆம்நாள் நண்பகல் வரை மொத்தம் 184 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது நாட்டில் தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 4,530 ஆகக் கொண்டு வந்திருக்கிறது. இதன் தாக்கம் அதிகமானால் சுங்கை பூலோ பழைய மருத்துவமனை மிக அவசியமான இடமாக மாறிவிடும். அதற்கான சிறந்த தேர்வு சுஙகைபூலோ தொழுநோய் மருத்துவமனைதான். இம்மருத்துவமனையை தைக்கோ ஆஸ்பிட்டல் என்றால்தான் பலருக்குப் புரியும். சீனர்கள் அதிகம் இருந்ததால் இச்சொல் வேரூன்றிவிட்டது.
உறுதி படுத்தப்பட்ட கொரோனா -19 வழக்குகளில் 44 விழுக்காட்டினர் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜொகூர் மருத்துவமனைகளுக்கு 42 வென்டிலேட்டர்களை பேரரசியார் நன்கொடையாக வழங்கியதால் இத்தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.
அரசாங்கத்தின் சுமையைக் குறைக்கும் முயற்சியாகும் இந்த நன்கொடை என்று பேரரசியார் கூறியிருக்கிறார். இவற்றை நண்பர்களோடு வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.