போலீஸ் முத்திரையுடன் முகக்கவசம் விற்பனையா?

கோலாலம்பூர்,ஏப்ரல் 13-

பாதுகாப்புப்படை அல்லது போலீஸ் சின்னத்துடன் விர்கப்படும் முகக்கவசங்கள் அல்லது சட்டைகளை, வாங்குதல் அல்லது பயன்படுத்துதல் கூடாது என்று காவல்துறை மக்களை எச்சரித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் தேசிய போலீஸ் படை சின்னத்துடனும் மலேசிய ஆயுதப்படை (எம்.ஏ.எஃப்) சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதாக அறியப்படுகிறது. இது முற்றிலும் தவறான செயலாகும் என்று புக்கிட் அமான் சி.ஐ.டி இயக்குநர் டத்தோ ஹுசிர் தெரிவித்துள்ளார்.

பி.டி.ஆர்.எம் எம்.ஏ.எஃப் உறுப்பினர்கள் மட்டுமே அந்த சின்னங்களுடன் முகமூடிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

இந்த நடவடிக்கை தொடர்ந்தால், பி.டி.ஆர்.எம் போலீஸ் சட்டம் 1967 இன் பிரிவு 89 (பி) இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்., இதற்கு 500 வெள்ளிஅபராதம் அல்லது ஆறு மாத சிறை, அல்லது இரண்டுமே வித்திக்கப்படலாம் என்று அவர் ஓர்அறிக்கையில் தெரிவித்தார்.

தகவல் தொடர்பு மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம், இது அதிகபட்சமாக 50,000 வெள்ளிஅபராதம் அல்லது ஒரு வருடம் வரை அல்லது இரண்டையும் கொண்ட தண்டனையாகவும் இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here