மலேசிய-தாய்லாந்து எல்லைப் பகுதியில் ‘ஸ்க்ரேம்ப்ளர்’ ரோந்து

தும்பாட் : எல்லைப்பகுதியின் ‘எலிப்பாதைகள்’ என வர்ணிக்கப்படும் வனப்பகுதி சந்து பொந்து ஒத்தையடிப் பாதைகளில் மக்கள் ஊடுருவலை தவிர்க்க அரச மலேசிய ராணுவப் படையினர்(வனப் பிரிவு) ஸ்க்ரேம்ப்ளர் வகை மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஹோண்டா எக்ஸ்.ஆர் 250 வகை ஸ்க்ரேம்ப்ளர் மோட்டார் சைக்கிளில் 40 ராணுவ வீரர்கள் 24 மணி நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனப்பகுதியினூடே வளைந்து நெளிந்து போகும் ஒத்தையடி எலிப்பாதைகளைப் பயன்படுத்தி மலேசிய-தாய்லாந்து மக்கள் வந்து போகும் சம்பவங்கள் நீடிப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செயல்முறை அதிகாரி சூப்ரிடெண்டண்ட் அஸாரி நூசி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக் கிருமிகள் தீவிரமடைந்து வருவதால் இரு நாடுகளின் எல்லைப்புற மக்களும் எலிப்பாதையை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here