கேட்பாரற்று கிடந்த கொரோனா நோயாளிகளின் சடலங்கள்

ஈகுவடார் நாட்டில் கேட்பாரற்று கிடந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் சடலங்களை  போலீசார் மீட்டுள்ளனர். கொரோனா வைரஸால் ஈகுவடார் நாட்டில் தற்போது வரை 7,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கிருக்கும் தலைநகர் குயாகுயில் நகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்கள் தெருக்களில் கேட்பாரற்று கிடப்பதை அப்பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

அதில், உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசு எடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மருத்துவமனையின் பிணவறையில் இருக்கும் ஊழியர்களால் சடலங்களை எடுத்து செல்ல முடியாத அவல நிலை நிலவுவதால், உடனடியாக குயாகுயிலில் போலீசார் மற்றும் இராணுவ அதிகாரிகள் பிணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணியில் ஈடுபட்ட போலீஸ்  மற்றும் இராணுவ குழுவுக்கு தலைமை தாங்கிய ஜார்ஜ் வேட்டட் என்பவர் டுவிட்டர் பதிவில்  போலீஸ் குழுவினர் 700-க்கும் அதிகமான சடலங்களை பல்வேறு வீடுகள் மற்றும் தெருக்களில் இருந்து மீட்டுள்ளோம்.

கடந்த 3 வாரங்களில் மருத்துவமனையின் பிணவறை நிரம்பியதால் 771 உடல்களை வீடுகளில் இருந்தும், மேலும் 631 உடல்களை வீதிகளில் இருந்தும் மீட்டுள்ளோம். இவற்றில் 600 சடலங்களை புதைத்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் பேட்டியளித்த ஜார்ஜ், இந்த மாத இறுதிக்குள் கயாஸ் மாகாணத்தில் கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை 3500-வரை இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here