வெளிநாட்டுத்தொழிலாளர்களின் நீர் திருவிழா கட்டுப்பாடு மீறல்!

கட்டுப்பாடு மீறல்!

கோலாலம்பூர், ஏப். 14- 

சிப்பாங் வட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைத் தொழிலாளர்கள் விடுதி வளாகத்தில் நீர் திருவிழாவில் ஈடுபட்டதாக 62 மியான்மார் நபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருக்கின்றனர்.

மக்கல் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டை மீறியதற்காக
விசாரணையைத் தொடர்ந்து தொழிற்சாலையின் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் பிற்பகல் 2 மணியளவில் அவர்கள் அனைவரும் ஒரு சோதனையில் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோஃப் தெரிவித்தார்.

சந்தேக நபர்களில் இருவர் தங்கள் கைப் போன்களைப் பயன்படுத்தி நிகழ்ச்சியைப் பதிவுசெய்து முகநூலில் பரப்பியதாக ஒப்புக்கொண்டனர்.

சிலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக ஒப்புக் கொண்டனர், மேலும் சம்பந்தப்பட்ட மற்ற சந்தேக நபர்களைக் கண்டறிய மேலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய இரு கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று ஓர்அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (சி), தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் பிரிவு 22, தகவல் தொடர்பு , தகவல் ஊடகச் சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

சோங்க்கிரான் என்று அழைக்கப்படும் நீர் திருவிழாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குழு நடனமாடி, பாடுவதைக் காட்டும் 30 நிமிட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியது, மேலும் அந்த வீடியோவின் தகவல்களின்படி, அவர்கள் ஒரு கையுறை தொழிற்சாலையின் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்றும் தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here