கோலாலம்பூர்:
அடுத்த 48 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் கடற்படை மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற தகவல்கள் இருந்தபோதிலும், குளோபல் சுமுத் புளோட்டிலா (GSF) எனும் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க செல்லும் குழு தனது பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்ளுகிறது.
இரண்டு இரவுகளுக்கு முன்பு கடுமையான துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான போதிலும், எந்தவொரு நிறுத்தங்களையும் செய்யாமல் தன்னார்வலர்களைக் கொண்ட மலேசிய கடற்படையின் பயணம் தொடரும் என்று அதன் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் யாசெமின் அகார் கூறினார்.
“இரண்டு இரவுகளுக்கு முன்பு, பல மணி நேரம் எங்கள் மீது தீ மழை பெய்தது, மேலும் புளோட்டிலா தாக்கப்பட்டது. நாங்கள் நிற்கப் போவதில்லை என்பது இஸ்ரேலுக்குத் தெரியும். இங்கிருந்து எந்த தொழில்நுட்ப நிறுத்தங்களையும் செய்ய மாட்டோம். மனிதாபிமான உதவிகளை வழங்க நாங்கள் நேரடியாக காசாவுக்கு எங்கள் பயணத்தை தொடர்வோம்,” என்று இன்று ஒரு கப்பலில்நடந்த ஒரு ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.





















