இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கொரோனா
ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி, ஏப்ரல் 15-

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்தது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 24ந்தேதி அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனை அடுத்து பொதுமக்களிடையே நேற்று காலை 10 மணியளவில் உரையாற்றிய பிரதமர் மோடி, மே 3ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார்.

இந்தியாவில், அடுத்த 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 38 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 439 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9,756 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1,306 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 377 ஆக உயர்ந்து உள்ளது. இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுவரை இல்லாத வகையில் நேற்றைய மொத்த பாதிப்பில் 10 சதவீதத்திற்கும் கூடுதலாக, ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here