லண்டன்,ஏப்ரல் 15-
கொரோனா தாக்குதலால் இங்கிலாந்து நாடே உருக்குலைந்து போய் கிடக்கிறது. அங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகிவிட்டனர். தலைநகர் லண்டனும் ஏராளமானோரை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்த துயரம், இங்கிலாந்தை உலுக்கிக் கொண்டிருக்க, இன்னொரு புறம், எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் சம்பவம் ஒன்று லண்டன் நகரில் கடந்த சனிக்கிழமை அரங்கேறி இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொரோனா தாக்குதல் காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் அவசரத் தேவைக்காக மக்கள் வெளியே சென்று வரலாம். உடற்பயிற்சி செய்வதற்காக பூங்காக்களுக்கு குறிப்பிட்ட நேரம் வரை செல்ல அனுமதியும் உண்டு.
ஆனால், ஊரடங்கின்போது உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை, ஒரு ஜோடி உல்லாசம் அனுபவிக்க பயன்படுத்திக்கொண்டு இருக்கிறது. லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே ‘செயின்ட் ஜேம்ஸ்’ என்ற பெயரில் ஒரு பூங்கா உள்ளது.
இந்த பூங்காவிற்கு கடந்த சனிக்கிழமை பிற்பகலில் வந்த ஒரு ஜோடி, அங்குள்ள நடைபாதையில் படுத்து உல்லாசம் அனுபவித்து உள்ளது.
இத்தனைக்கும் அப்போது அந்த வழியே பலர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். சைக்கிளிலும் வலம் வந்துள்ளனர். அவர்களும் இதைக்கண்டு கொள்ளவில்லை. உல்லாசத்தில் மூழ்கி இருந்த ஜோடியும் இதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. சுமார் 15 நிமிடம் வரை தங்களது காம லீலையை அவர்கள் தொடர்ந்துள்ளனர்.
அப்போது, அங்கே குதிரைகளில் ரோந்து சுற்றி வந்த பாதுகாவலர்கள் இருவர் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த ஜோடியிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஜோடி, பாதுகாவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், பதிலுக்கு பதில் பேசிய பாதுகாவலர்களோ உல்லாச ஜோடியை கடுமையாக எச்சரித்து அனுப்பாமல் சற்றுத் தள்ளி நின்றவாறே கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க ‘சமூக இடைவெளி அவசியம் தேவை’ என விளக்கிக் கூறியதுதான், இதன் உச்சம்.
ஆனால், இந்த காட்சிகளையெல்லாம் சைக்கிளில் வந்த ஒருவர், தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரவ விட அதைப்பார்த்து ‘விவஸ்தை கெட்டவர்கள்’ என அந்த ஜோடியை இங்கிலாந்தே இப்போது கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறது.