பாகன் செராய் ஏப்: 15 –
இங்குள்ள அலோர் போங்சு டோல் சாவடியில் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கான சாலை மறியலின் போது 4,500 மதிப்புள்ள சிகரெட்டுகளைக் கடத்தியதாக போலீசார் ஒரு நபரைக் கைது செய்திருக்கின்றனர்.
கிரியான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுபரிண்டெண்ட் உமர் பக்தியார் யாகோப் கூறுகையில், 30 வயதுடைய நபர் ஓட்டிய கார் மாலை 4.30 மணியளவில் சாலைத் தடையில் நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது என்றார்.
சோதனையிட்டபோது, காரில் 71 அட்டைப்பெட்டிகளில் சிகரெட்டுகள் இருந்தன.
சிகரெட் விநியோக உண்மை அறியும் நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் கிரியான் போலிஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.