மும்பையில் திடீர் போராட்டம்- போலீசார் தடியடி

மும்பையில் திடீர் போராட்டம்- போலீசார் தடியடி
மும்பை, ஏப்ரல் 15-
நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில்,  வெளி மாநிலத் தொழிலாளர்கள் பலர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்  முறைசாரா தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,  தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி  மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறி அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சமூக விலகலை கடைபிடிக்காமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here