தொடரும் கிம்மாவின் உதவிகள்

கூட்டரசு பிரதேச கிம்மாவின் ஏற்பாட்டில் பல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை எளியோருக்கு உணவு உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களை வழங்கி வருவதாக கூட்டரசு பிரதேச கிம்மா தலைவர் அஸ்ரப் தெரிவித்தார்.

கொரோனா காலக்கட்டத்தில் பலர் உணவின்றி தவிக்கின்றனர். ஏனெனில் அன்றாடம் வேலைக்கு சென்றால் தான் உணவு கிடைக்கும் என்ற நிலையில் பலர் வாழ்ந்து வருகின்றனர். கோலாலம்பூர் வட்டாரத்தில் அவ்வாறான நிலையில் வாழ்ந்து வருபவர்களுக்கு தினசரி உதவிகளை வழங்கி வருகிறோம் என்றார்.

நாங்கள் வழங்கும் உதவிக்கு பேராதரவு வழங்கி வரும் எங்களின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ சையது இப்ராஹிமிற்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அஸ்ரப் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here