சுங்கை பூலோ, ஏப்.19-
தொழில் வல்லுநர்களைக் கொண்ட 200 க்கும் மேற்பட்டவர்களைக்கொண்டு , கோவிட் -19 நோயாளிகளின் மாதிரிகளை எடுக்க ஒரு முன்மாதிரி கொரோனா வைரஸ் நடமாடும் பரிசோதனக் குழுவை உருவாக்க இணைந்து செயல்படுகிறது சுங்கை பூலோ யுஐடிஎம் மருத்துவமனை. இது ஒரு முன்னோடித்திட்டமாகும்.
இக்குழுவால் உருவாக்கப்படும் முன்மாதிரியான இப்பகுதி, கோவிட் -19 க்கு எதிரான மருத்துவர்கள் வடிவமைப்பு பொறியாளர்கள் பகுதி என சிறப்பாகஅழைக்கப்படுகிறது, இது நிபுணத்துவத்தை முழுமையாகப் பயன்படுத்த முனைந்திருக்கிறது.
DDEC19MY இணை நிறுவனத்தின் டாக்டர் அனஸ் மாட் ஆஜிஸ் கூறுகையில், முன்னணி பிரிவினர் எதிர்கொள்ளும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் (பிபிஇ) பற்றாக்குறைக்கும், மாதிரிகள் விரைவாகவும், திறமையாகவும், பாதுகாப்பாகவும் பெறுவதற்கு இத்தீவிரப் பிரிவு நல்ல தீர்வுக்கு வழி வகுக்கும்..
சுங்கை பூலோ யுஐடிஎம் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள முதல் முன்மாதிரி தீவிர மாடலில், மாற்றுத் திறனாளிகள், ஏர் கண்டிஷனர்கள் , செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு ஆகியவற்றுக்கான வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.
.இது , சிவப்பு மண்டலப் பகுதியைப் போல மிகவும் தேவைப்படும் பகுதிகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பாமல் சுவாச அறிகுறிகள் காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கோவிட் -19 க்குப் பிந்தைய எதிர்மறை அழுத்த அறையாக இப்பிரிவு மாற்றப்படலாம் என்றும்ம் டாக்டர் அனஸ் கூறுகிறார்.
இதை ஒரு கிளினிக் , மினி ஆய்வகமாகவும் மாற்றலாம், இதைப் பயன்படுத்த சுகாதார அமைச்சின் ஒப்புதலுக்காக மருத்துவமனை காத்திருக்கிறது என்றும் அவர் கூறினார்