வடகிழக்கு பிலிப்பைன்ஸில் காற்றழுத்தத் தாழ்வு – மலேசியாவுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை

கோலாலம்பூர் – மலேசிய வானிலைத் துறை இன்று காலை எட்டு மணிக்கு வெப்ப மண்டல காற்றழுத்த த் தாழ்வு நிகழ்ந்ததாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இது பிலிப்பைன்ஸ் சாமர் தீவின் வடகிழக்கில் 787 கிலோமீட்டர் தொலைவில் கண்டறியப்பட்டது. இந்த காற்றழுத்தம், மேற்கிலிருந்து வடமேற்குப் பக்கம் மணிக்கு இருபது கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாகவும், அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 56 கிலோமீட்டராக உள்ளது எனவும் தெரிவித்திருந்தது.

மேலும், சபா மாநிலம் சண்டாகான் நகரிலிருந்து சுமார் 1,780 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எனவும்
இந்த காற்றழுத்தத் தாழ்வு மலேசியாவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது எனவும் மெட்மலேசியா இதுகுறித்து விளக்குகையில் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here