நீலாயில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத குடியேற்றம் தொடர்பில் அமீனுடின் அதிருப்தி

கடந்த புதன்கிழமை, நீலாயில் பள்ளி வசதிகளைக் கொண்ட ஒரு சட்டவிரோத குடியேற்றம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக அத்தகைய குடியிருப்புகளை அமைக்க அனுமதிப்பது என்னைப் பொறுத்தவரை, இது ஒரு சிறிய விஷயம் அல்ல, மன்னிக்க முடியாதது, இதை நான் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் கூற விரும்புகிறேன், மேலும் இது மீண்டும் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் துறைகளும் உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் நேற்று நடந்த ஒரு சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

நீலாயில் குடியேற்றமாக மாற்றப்பட்ட ஒரு பகுதியில் பல அரசாங்க நிறுவனங்கள் இணைந்து கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனையின் போது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் இருந்த மொத்தம் 67 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பில் அமினுடின் இவ்வாறு பதிலளித்தார்.

அங்கு கைது செய்யப்பட்டவர்கள் இரண்டு மாத குழந்தை முதல் 72 வயதுக்கும் இடைப்பட்ட பதினொரு ஆண்கள், 20 பெண்கள், மற்றவர்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் என்றும், சீரற்ற மற்றும் சதுப்பு நிலத்தில் அமைந்திருந்த அந்த குடியிருப்புக்கு பல ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஈட்டிகள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

உள்ளூராட்சி மன்றங்கள், காணி அலுவலகம், போலீஸ் மற்றும் குடிநுழைவுத் துறை உள்ளிட்ட அனைத்து அமலாக்க முகவர்களும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் இதுபோன்ற விஷயங்கள் தொடர்பான புகார்களைப் பெற்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமினுடின் கூறினார்.

மேலும் அமலாக்கக் குழுக்கள் தகவல்களைச் சேகரித்து, இதுபோன்ற சட்டவிரோத குடியேற்றங்கள் கட்டப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அதிக ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அடுத்த மாநில பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவர் இந்த விஷயம் தொடர்பில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here