- சந்திராஷ்டம நாட்களில் பிறருக்கு நீங்கள் நன்மைகள் செய்தாலும் அது தீமையாக முடியும். சந்திராஷ்டம நாட்களில் எதிர்பார்த்தது நடைபெறாது.
ஒவ்வொருவருடைய ராசிக்கும் 8-ல் சந்திரன் வரும் இரண்டே கால் நாட்களும் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். அந்த நேரத்தில் பிறருக்கு நீங்கள் நன்மைகள் செய்தாலும் அது தீமையாக முடியும். சந்திராஷ்டம நாட்களில் எதிர்பார்த்தது நடைபெறாது.
குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். நிம்மதி குறையும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படும். பிறருக்கு பொறுப்புச் சொல்வதால் சிக்கல்கள் ஏற்படும். பயணங்களால் தொல்லை ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. எனவே தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கை தேவை. உங்கள் ராசிக்கு 8-ல் சந்திரன் உலாவரும் பொழுது பொறுமை, அமைதி, நிதானம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதோடு ஆலய வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.