கொரோனாவால் 149 பில்லியன் யூரோக்கள் நஷ்டம்… இழப்பீடு கோரி சீனாவிற்கு பில் அனுப்பிய ஜெர்மனி

கொரோனாவால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு கோரி  ஜெர்மனி 149 பில்லியன் யூரோக்கள் பில் அனுப்பியுள்ள விஷயம் சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏராளமான உயிர்களை பலிகொண்டு, உலகின் பொருளாதார நிலையையும் கடுமையாக பாதித்துவிட்ட கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் மீது உலக நாடுகள் பலவும் கடுமையான  வெறுப்பில் உள்ளன. இந்நிலையில், ஜெர்மனி சீனாவுக்கு பில் ஒன்றை அனுப்பியுள்ளது. உங்களால் எங்களுக்கு 149 பில்லியன் யூரோக்கள் நஷ்டம் என்று கூறி பில் ஒன்றை அனுப்பியுள்ளது ஜெர்மனி.

அந்த பில்லில், சுற்றுலா இழப்புக்காக 27 பில்லியன் யூரோக்களும், திரைப்படத்துறையில் ஏற்பட்ட இழப்புக்காக 7.2 பில்லியன் யூரோக்களும், விமான சேவையில் ஏற்பட்ட இழப்புக்காக ஒரு பில்லியன் யூரோக்களும், சிறு தொழில்களில் ஏற்பட்டுள்ள இழப்புக்காக 50 பில்லியன் யூரோக்களும், சீனா தங்களுக்கு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்துள்ள சீனா, இது அயல்நாட்டு வெறுப்பையும் தேசியவாதத்தையும் தூண்டும் செயல் என விமர்சித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here