சுங்கைப்பட்டாணி: தனது வீட்டையே போதைப்பொருள் கிடங்காக மாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவருடன் மேலும் 10 ஆடவர்களும் கோலமூடா போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
பாயா நாகு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த அதிகாரிகள் இருவரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து எஞ்சிய 9 பேர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் தலைவர் அர்னிடா இஷாக் தெரிவித்தார்.