உலகின் பல நாடுகளில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 90,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் அமெரிக்காவில் 515 பேர் கொரோனாவால் நேற்று உயிரிழந்தனர்.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மொத்தம் 21,21,03,181 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44,35,512. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 18,97,33,602.

அமெரிக்காவில் அதிக பாதிப்பு

உலக அளவில் அமெரிக்காதான் மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 90,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,85,19,247. அமெரிக்காவில் நேற்று மட்டும் 515 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 6,44,838 பேர் பலியாகி உள்ளனர்.

இங்கிலாந்து

அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்தில் நேற்று கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இங்கிலாந்தில் நேற்று மட்டும் 32,058 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இங்கிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு 64,60,930. இங்கிலாந்தில் நேற்று 104 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இங்கிலாந்தை தொடர்ந்து ஒருநாள் பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் நேற்று 31,043 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்தியாவில் நேற்று மட்டும் 401 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32,423,549. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 4,34,399 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அதிக கொரோனா மரணங்கள்

உலக நாடுகளில் இந்தோனேசியாவில்தான் ஒருநாள் கொரோனா மரணங்கள் அதிகமாக பதிவாகி வருகிறது. இந்தோனேசியாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1,361 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தோனேசியாவுக்கு அடுத்ததாக ரஷ்யாவில் நேற்ரு 797 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர்.

ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் இருக்கிறது மெக்சிகோ. மெக்சிகோவில் நேற்று 761 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். பிரேசிலில் 585; ஈரானில் 544; பிலிப்பைன்ஸில் 398 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கேரளாவில் அதிகம்

இந்தியாவைப் பொறுத்தவரையில் கேரளாவில்தான் மிக அதிகமாக நேற்று 17,106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் 83 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் 4,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மகாராஷ்டிராவில் நேற்று 145 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். தமிழகத்தில் 1652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் நேற்று 23 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here