சிறுவன் கடத்தப்பட்டரா? போலீசார் மறுப்பு

கோலாலம்பூர் – மசூதியில் ஒருவரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிறுவன், கடத்தப்பட்டதாக  கூறுவதை போலீசார் மறுத்துள்ளனர். சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமத் கூறுகையில், 10 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபர் பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் வீட்டு முகவரியைக் கேட்டுள்ளார். ஆனால் அந்த சிறுவன் பயந்து அருகிலுள்ள பள்ளிக்கு தப்பி ஓடினான்.

பாதிக்கப்பட்டவர், உள்ளூர் பெண்ணான புகார்தாரரிடம் இந்தச் சம்பவத்தைப் புகாரளித்தார். நேற்று, புகார்தாரர் சம்பவத்தின் வீடியோ மற்றும் படங்களைப் பெற்றார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். முகநூலில் வைரலாக  வீடியோ, சுபாங் ஜெயாவில் கடத்தல் முயற்சியின் படங்களையும் கூற்றுகளையும் காட்டியதாக வான் அஸ்லான் கூறினார். எனினும், முதற்கட்ட விசாரணையில் இந்தக் கூற்றுகள் பொய் என கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2021 இன் பிரிவு 14 (a) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார். பொதுமக்களின் கவலையை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அறிக்கையையும் சமூக ஊடகங்களில் வெளியிடும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும், தங்களின் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்குமாறும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உதவி விசாரணை அதிகாரி சார்ஜென்ட் சித்தி ஷபிலா சுல்கிஃப்லே@அவாங்கை 010-2667017 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here