ஜாக்கர்த்தா: கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் மலேசிய மாணவர்களின் நிலைமையை இந்தோனேசியாவில் உள்ள மலேசிய தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அறிவித்திருக்கிறது.
இந்தோனேசியாவில் உள்ள மலேசிய மாணவர்களின் தேசிய சங்கம் (பி.கே.பி.எம்.ஐ), உள்ளூர் அதிகாரிகளுடன் தூதரக நெருக்கத்தோடு மாணவர்களைக் கவனமாக கண்காணித்து வருகிறது.
கோவிட் 19 – தொடங்கியதில் இருந்து இதுவரை இந்தோனேசியாவில் 2,799 மலேசிய மாணவர்கள் திரும்பி வந்துள்ளனர், அதே நேரத்தில் 989 மாணவர்கள் இந்தோனேசியாவில் விசா பிரச்சினகளைத் தீர்ப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் உள்ள மலேசிய தூதர் டத்தோ ஜைனல் அபிடின் பக்கார், இந்தோனேசியாவில் உள்ள தூதரகம், அவர்களின் நிலைமை குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற நாடு முழுவதும் உள்ள பி.கே.பி.எம்.ஐ பிரதிநிதிகளுடன் வீடியோ தொடர்பு மூலம் அறிந்துகொள்ளும்படி கூறியிருக்கிறார்.
சமீபத்திய தகவல்களைப் பெறுவதைத் தவிர, அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு இணங்கவும், அவர்களின் சுகாதாரத்தைக் கவனிக்கவும், சமூக தூரத்தை கடைப்பிடிக்கவும் அவர்களிடம் பகிரப்பட்டது.
பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பி.கே.பி.எம்.ஐ பிரதிநிதிகளுடன் ஒரு வீடியோ மாநாட்டில், மலேசியாவைச் சேர்ந்த மாணவர்கள், மதப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் கண்டுபிடிப்பதற்காக உதவியைக் நாடியதில்
பி.கே.பி.எம்.ஐ பிரதிநிதிகள் மலேசிய மாணவர்கள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.