புதிய நோயாளிகள் 1,111
சிங்கப்பூர் –
சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் அதிகரித்ததால் ஊரடங்கு ஜூன் 1 வரை நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் லீ சியென் லூங் நேற்று அறிவித்தார்.
அதே சமயம் மே 4ஆம் தேதி வரை நடப்பு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படும் என்றார் அவர். இன்னும் அதிகமான வேலை இடங்கள் மூடப்படும் எனவும் அவர் கூறினார்.
நேற்று அந்நாட்டில் புதிதாக 1,111 கோவிட் -19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்வழி அந்நாட்டில் இதுவரை மொத்தமாக 9,125 கோவிட்-19 சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மேலும் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றினால் பாதிப்படைந்துள்ளது இது 2ஆவது முறையாகும்.
புதிதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவங்களில் பெரும்பாலானோர் அந்நாட்டில் தங்கி வேலைசெய்யும் அந்நியப் பிரஜைகளாவர்.
20 சம்பவங்கள் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் அந்நாட்டின் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என அவ்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.