சரவாகில் வெள்ள நிலைமை சீரடைகிறது – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 427 ஆகக் குறைவு!.

கோலாலம்பூர்:

சரவாக் மாநிலத்தில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளதால், நிவாரண மையங்களில் தங்கியிருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, 129 குடும்பங்களைச் சேர்ந்த 427 பேர் மட்டுமே இன்னும் மூன்று நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

சிபுவில் உள்ள SMK புக்கிட் அசெக் (SMK Bukit Assek) மண்டபத்தில் செயல்பட்டு வந்த நிவாரண மையம் நேற்று மாலை மூடப்பட்டது.

தற்போது மாநிலம் முழுவதும் மூன்று மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன: அதாவது பிந்துலு சுவாரா மண்டபம் (Dewan Suarah Bintulu): 184 பேர், செபாவ் சமூக நல மண்டபம் (Sebauh Community Hall): 148 பேர்,
ஸ்ரீ கெமெனா மண்டபம், SMK செபாவ்: 95 பேர் என மொத்தம் 427 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் 507 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று கணிசமாகக் குறைந்துள்ளது.

வெள்ள நிலைமை சீரடைந்தாலும், இன்றும் காலை 7.30 மணி நிலவரப்படி மூன்று இடங்களில் ஆற்று நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் (Danger Level) தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் ஐந்து நிலையங்களில் நீர்மட்டம் எச்சரிக்கை நிலையில் (Warning Level) இருப்பதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் (DID) ‘இன்போபஞ்சீர்’ (Infobanjir) அகப்பக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here