சியோல்,ஏப்ரல் 23-
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது குடும்பத்தின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று வட கொரியா செய்தி நிறுவனமான டெய்லி என்.கே தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உதவியுடனான இந்த தகவல்களுக்கு சீனாவும், தென் கொரியாவும் மறுப்பு தெரிவித்துள்ளன.
வட கொரியாவின் ஹியாங் சான் நகரில் உள்ள இந்த மருத்துவமனை நீண்டகாலமாக இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சிறப்பு வசதிகள் உள்ளன என்று டெய்லி என்.கே மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் டெய்லி என்.கே வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-
ஹியாங் சான் தலைநகர் பியோங்யாங்கிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வட கொரியா தந்தை என அழைக்கப்படும் கிம் இல்-சங் இறந்த பின்னர் 1994 ஆம் ஆண்டில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை இருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கும் என்று கிம் நம்பினார்.
கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் இருதய சம்பந்தப்பட்ட நோய்களில் நிபுணர். வெளிநாட்டில் கூட பயிற்சி பெற்றுள்ளார். டாக்டரும் கடுமையான பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
மருத்துவமனையில் உள்ள மருத்துவ உபகரணங்கள் ஜெர்மனி மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன.
அதிக புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கிம் இந்த மாத தொடக்கத்தில் இருதய சிகிச்சை செய்து கொண்டார்.