பாதுகாப்பு வளையத்திற்குள் செலாயாங்

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாடு இன்னும் அகன்றதாய் மாறியிருப்பதில் சிலாங்கூர் மாநிலத்தின் செலயாங் வட்டார் குடியிருப்பாளர்கள் ஆழ்ந்த  அதிர்ச்சியில் மூழ்கியிருக்கின்றனர்.

இவர்களில் ஓர் ஆசிரியரான 53 வயதான நஸ்ரி அப்துல்லா, அவர் வழக்கமாக செல்லும் மருந்தகப்பாதைச் சுற்றிலும் முள்வேளிகளால் வளைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் மூழ்கியிருப்பதாகக்கூறுகிறார்.

குடும்பத்தோடு இருக்கின்ற இவர், மருந்தகத்திற்குச் செல்ல ஒரு கிலோமீட்டர் தூரதிற்குச் போகவேண்டும். இது, இப்போது நிச்சயமாக கவலை அளித்திருக்கிறது, வீட்டுப்பகுதியில் நெருக்கத்தில் இதுபோன்று நடக்கும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை,என்கிறார் அவர்..

தமது பேரக் குழந்தைகளையும் ஊரடங்கு விடுவைக்கவில்லை.  ஆக்கிரமித்து வைத்திருப்பதால் அவர்கள் கதவுகளுக்கு வெளியே கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை.

குழந்தைகள் இவ்வளவு நேரம்தான்  வீட்டுக்குள் இருப்பார்கள், இது எளிதல்ல. அவர்கள் சலிப்படைவார்கள், எனவே நாங்களும் அவர்களின் விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும், மேலும் திரைப்படங்கள்தான் உதவுகின்றன என்கிறார் அவர்.

மொத்த சந்தைப்பகுதி அருகே வேலியிடப்படுவதற்கு  முன்னர் சிலர் இப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக அறிய முடிந்தது, எனவே இதுபோன்று ஏதாவது இங்கே நடப்பதற்கு முன்பே இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இருக்கிறது என்று மருந்தக நடத்துநரான  ஒருவர்  கூறுகிறார்.

இங்குள்ள சந்தைப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது, அத்தியாவசிய பொருட்களை வாங்க  பத்துமலையில் உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டுக்குச் செல்ல வேண்டும் என்று மருந்தக நடத்துநரான ரசாலி மேலும் கூறினார்.

மளிகை சாமான்களை வாங்கச் சென்றபோது ஈரச் சந்தையைச் சுற்றி வளைத்திருப்பதைக் கண்டு குடியிருப்பாளர் மொகமட் சியாவல் ஆச்சரியப்பட்டார்.
இந்த மூடல் பற்றி எந்த அறிவிப்பும் இல்லாததால் இங்கு பலருக்கு அது தெரியவில்லை என்கிறார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here