கோவிட்-19: ஆசியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட 3ஆவது நாடாக சிங்கப்பூர் மாறுகிறது

சிங்கப்பூர் (ப்ளூம்பெர்க்): ஆசியாவின் மிகச்சிறிய மக்கள்தொகையில் ஒன்றான சிங்கப்பூர், உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளுக்குப் பிறகு உலகில்  அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியிருக்கிறது.

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) 931 புதிய சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டிருந்தது. மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 13,000 ஐத் தாண்டி  ஜப்பானை முந்தியது. ஆசியாவில் சீனா மற்றும் இந்தியா மட்டுமே அதிக சம்பவங்கள் இருக்கும் நாடாக இருக்கிறது.

பெரும்பாலான தொற்றுநோய்கள் தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே உள்ளது. இது வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூரின் ஆரம்பகால வெற்றிக்கு பெரும் பின்னடைவை அளிக்கிறது. சிங்கப்பூரியர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் புதிய சம்பவங்கள் 15 மட்டுமே என்கிறது அரசாங்கம்.

கடந்த வாரம், சுமார் 57 லட்சம்  மக்கள் வசிக்கும் அந்நாட்டில் ஜூன் 1 வரை ஊரடங்கு அமலப்படுத்தப்பட்டுள்ளது.  “சர்க்யூட் பிரேக்கர்” என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கைகளில் பள்ளிகளை மூடி வைப்பது, அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவது மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை அவர்களின் தங்குமிடங்களில் அடைப்பது ஆகியவை அடங்கும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகளவில் தொடர்ந்து பரவி வருவதால், விநியோகச் சங்கிலிகளை சீர்குலைப்பதால், சிங்கப்பூர் இந்த ஆண்டு 4 விழுக்காடு பொருளாதார வீழ்ச்சியை காணும்.

நாம் எதிர்பார்த்ததை விட  உலகளவில் கோவிட்-19 தாக்கம் அதிகரித்திருப்பதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் காணும் சாத்தியம் இருப்பதாக  கைத்தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 23) ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

இருப்பினும், தங்குமிடங்களில் சமீபத்திய வெடிப்பிலிருந்து எந்தவொரு சம்பவங்களுக்கும் தீவிர சிகிச்சை தேவையில்லை, ஏனெனில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பொதுவாக இளைஞர்கள் மற்றும் அறிகுறிகள் லேசானவை என்று பிரதமர் லீ ஹ்சியன் லூங் ஏப்ரல் 21 அன்று தெரிவித்தார்.

சிங்கப்பூர் நியூயார்க் நகரத்தை விட சிறியதாகும்- தொற்றுநோயால் இதுவரை 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here