இறுதிச்சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்ட சவப்பெட்டி -உள்ளே இருந்தது கஞ்சா

தென் ஆப்பிரிக்காவில் இறுதிச்சடங்கை நடத்தும் நபர்களாக கட்டிக் கொண்டவர்களின் காரின் உள்ளே இருந்த சவப்பெட்டியை அதிகாரிகள் திறந்து பார்த்த போது அதில் கஞ்சா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் கடுமையான விதிகள் உள்ளது. இதன் காரணமாக அங்கிருக்கும் போலீசார் கடுமையான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கொரோனாவிற்காக அமைக்கப்பட்டிருந்த சோதனை சாவடியில், புத்திசாலித்தனமாக உடையணிந்திருந்த இரண்டு பேர், தாங்கள் இறுதிச்சடங்கை நடத்துபவர்கள்   உடலை தகனம் செய்வதற்காக சவப்பெட்டியை எடுத்துக் கொண்டு செல்கிறோம் என்றனர்.

இதையடுத்து, வாகனம் சோதனை சாவடியில் இருந்து சற்று தூரம் சென்றவுடன், திடீரென்று வாகனத்தில் இருந்த விளக்குகள் அணைக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், மீண்டும் வாகனத்தின் அருகே சென்று விசாரித்த போது, தடுமாறியுள்ளனர். அதுமட்டுமின்றி சவப்பெட்டியை திறந்து காட்டும் படி கூறிய போது, அவர்கள் மறுத்துள்ளனர்.

இது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்பட்டு அப்பெட்டியை திறந்து பார்த்தபோது  30 பொட்டலங்களில் சுமார் 80 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 35,000 டாலர் என்று கூறப்படுகிறது.

KwaZulu-Natal மாகாணத்தின் Pongola-வில் உள்ள N2 சாலையில் நடத்திய சோதனையின் போதே இவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் வைத்திருந்ததற்காகவும், கொரோனாவிற்கான விதிமுறைகளுக்கு எதிராக போக்குவரத்து அனுமதி மோசடி செய்ததற்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோன வைரஸ் பரவல் காரணமாக போலீசார் சவப்பெட்டியை கண்டவுடன் விட்டு விடுவார்கள் என்ற எண்ணத்தில், இந்த போதை பொருள் கடத்தல் ஆசாமிகள் ஈடுபட்டுள்ளனர்.  அந்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக, 4,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 90 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here