எங்களின் தொழிலை எப்போது தொடங்குவது – மகாஸ் உறுப்பினர்களின் வேதனைக் குரல்

என்று தணியும் இந்த கொரோனா தாக்கம் என்று உலகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் வேளையில் மலேசிய சிகையலங்கார உரிமையாளர்கள் சங்கம் (மகாஸ்) உறுப்பினர்கள் எங்களின் தொழிலை என்று தொடங்குவது என்று தெரியாமல் திண்டாடத்தில் இருப்பதாக மக்கள் ஓசையிடம் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

அரசாங்கம் மக்களின் நன்மைக்கான திட்டங்களை அமல்படுத்துகிறது என்பதனை நாங்கள் அறிவோம். அதே வேளை எங்களின் நிலையையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மகாஸ் தலைவர் ஏ.கே.செல்வன் வேண்டுகோள் விடுத்தார்.

தெலுக் இந்தான் வட்டாரத்தில் கடந்த  30 ஆண்டுகளாக சிகையலங்காரத் தொழிலை நடத்தி வரும் புலனேந்திரன் கூறுகையில் இரண்டு அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் தங்குமிடம் மற்றும் சம்பளம், கடை வாடகை, பில்  ஆகியவற்றிக்கு மாதம் ஒன்றுக்கு 5,000 வெள்ளி தேவைப்படுவதாகக் கூறினார். ஏறக்குறைய 48 நாட்களாக தொழில் செய்யாமல் இருக்கும் எங்களுக்கு அரசாங்கம் கருணை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பண்டார்பாரு பாங்கியில் சிகையலங்கார கடையை நடத்தி வரும் சிவராசா கடை செலவு உள்ளிட்டவைகளை சமாளிக்க மாதந்தோறும் 12ஆயிரம் வெள்ளி தேவைப்படுகிறது என்றார்.

கிள்ளான் ரமணி கூறுகையில் நான் 6 கடைகளை நடத்தி வருகிறோம். சில கடைகளுக்கு மட்டும் உரிமையாளர்கள் பாதி வாடகை பணத்தை பெற்று கொண்டனர். மற்ற கடைகளுக்கு முழு வாடகை பணத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி கடையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நான் மாதந்தோறும் 1,400 வெள்ளி வாடகை செலுத்துகிறேன்.  தினமும் பணியாளர்களின் சாப்பாட்டு செலவிற்கு தினந்தோறும் 15 வெள்ளி வழங்கி வருகிறேன் என்கிறார் சிவகாந்தி என்ற ரோமியோ. இதை தவிர்த்து வீட்டு வாடகை உள்ளிட்ட செலவினைகளை சமாளிக்க முடியவில்லை என்கிறார்.

ஷாஆலம் செத்தியா அலாமைச் சேர்ந்த ஐயப்பன் கூறுகையில் கடந்த 13 வருடங்களாக கடை நடத்துகிறேன். அரசாங்கத்தின் உத்தரவை இன்றளவும் கடைபிடித்து வருகிறேன். கடை வாடகை பாதியாவது கட்ட வேண்டும் என்று கடை உரிமையாளர்கள் கேட்கின்றனர். தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் சம்பளமும் அத்திவாசியப் பொருட்களையும் வாங்கி தருகிறேன். ஆனால் இதே நிலை நீடித்தால் சமாளிக்க இயலாது என்கிறார் 2 கடைகளை நடத்தி வரும் இவர்.

பினாங்கு மாநிலத்தில் 6 கடைகளை நடத்தி வரும் எம்.எல்.குப்பன் கூறுகையில் 9 பேர் தன்னிடம் பணியாற்றி வருகின்றனர். ஒருவருக்கு மாதந்திர சம்பளம் 1500 வெள்ளி வழங்க வேண்டும். அனைத்து கடைகளும் வாடகை என்பதால் சில கடை உரிமையாளர்கள் கடையை காலி செய்யுமாறு கேட்டிக்கின்றனர். என் ஒருவரின் வருமானத்தைக் கொண்டுதான் குடும்பம் இயங்கி வருகிறது என்றார். நிபோங் திபால் மற்றும் ஜோகூர் மாநிலத்தில் கடை நடத்தி வரும் மகேந்திரன் கிருஷ்ணன்.

சிக்கிங்சாங்கில் 3 கடைகளை நடத்தி வரும் ராஜகுமார் மாதவன் கூறுகையில் 15 ஆண்டுகளாக தொழில் நடத்தி வருகிறோம். இரண்டு மாத வாடகையை கேட்கின்றனர். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருக்கிறோம். ஒரு கடைக்கு மாதந்தோறும் ஏழாயிரம் வெள்ளி வரை தேவைப்படுகிறது.

சிரம்பானில் 3 சிகையலங்கார கடையை 14 ஆண்டுகளாக  நடத்தி வரும் முகிலன் கூறுகையில் மாதந்தோறும் 10ஆயிரம் வெள்ளி செலவுக்காக தேவைப்படுகிறது என்றும் எங்கள் தேவைகளை சமாளிக்க அரசாங்கம் எங்களுக்கு நிச்சயம் உதவி செய்வார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.

எங்களின்  இன்னல்களை யாரிடம் சொல்லி தீர்த்து கொள்வது என்று தெரியாமல் இருக்கிறோம் என்று பினாங்கு சுங்கை அராவில் 15 ஆண்டுகளாக கடை நடத்தி வரும் சங்கேஷ் குமார் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

4 கடைகளை நடத்தி வரும் டேவிட் நாகப்பன் கூறுகையில் மாதந்தோறும்  என்னுடைய செலவு 27 ஆயிரம் வெள்ளியாகும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறேன்.

ஜோகூர் பாருவில் 20 ஆண்டுகளாக  கடை நடத்தி வருகிறேன். இதுபோன்ற நெருக்கடியை வாழ்நாளில் சந்திதத்து இல்லை என்கிறார் பாலகிருஷ்ணன். அதே போல் கூடாய் பகுதியில் 2011ஆம் ஆண்டு தொடங்கி கடை நடத்தி வருவதாகவும் தற்போதுள்ள  மக்கள் நடமாட்டக் கட்டுபாட்டினால் பெருமளவு பிரச்சினையை எதிர்நோக்குவதாகக் கூறினார்.  ஜோகூர்பாருவை சேர்ந்த குமரன் என் மனைவியின் பெயரில்  கடை நடத்தி வருகிறேன். எங்களின் பிரச்சினையை தீர்க்க வழி வகுக்க வேண்டும்.

பாலிங், கெடாவை சேர்ந்த ஷர்மிளா கூறுகையில் எங்களின் நிலையை அறிந்து அரசாங்கம் உதவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 21 ஆண்டுகளாக பந்தாங்காலி பகுதியில் கடை நடத்தி வருகிறோம். எம்சிஓ நீட்டித்தால் மிகவும் சிரமமான நிலைக்கு தள்ளப்படுவோம் என்கிறார் சிவா.

தாமான் மல்லூரியில் கடை நடத்தி வரும் ஜி.ராமநாதன் கூறுகையில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. மித்ரா உதவி செய்வார்கள் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. புக்கிட் மெர்தாஜாம் வட்டாரத்தில் 16 ஆண்டுகளாக கடை நடத்தி வரும்  பாஸ்கரன் கூறுகையில் சம்பளம், வாடகை ஆகிய செலவுகளை சமாளிக்க மாதந்தோறும் 10ஆயிரம் வெள்ளி தேவைப்படுகிறது.ஹர்தமாஸ் மற்றும் சுங்கைபூலோ வட்டாரங்களில் 20 ஆண்டுகளாக கடை நடத்தி வரும் பாஸ்கரன் பேசுகையில் இதுபோன்ற சூழ்நிலை வரும் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்.

தஞ்சோங் மாலிம் பகுதியில் 15 ஆண்டுகளாக நடத்தி வரும் சுப்பிரமணியம், அலோர் ஸ்டார் வட்டாரத்தில் 30 ஆண்டுகளாக கடை நடத்தி வரும் சேர்ந்த ரகு நல்லையா, நெகிரி செம்பிலான், சிரம்பான் வட்டாரத்தைச் சேர்ந்த  தேவகுமார், கெடாவில் குருண் வட்டாரத்தை பாலசந்திரன், அம்பாங் மற்றும் செராஸ் வட்டாரத்தில் 16 ஆண்டுகளாக கடை நடத்தி வரும் சைமன் ராஜா, பேரா பத்துகாஜாவில் 18 ஆண்டுகளாக கடை நடத்தி வரும் ரவிகுமார், சேகர் பொன்னுசாமி, பெட்டாலிங் ஜெயாவில் 33 ஆண்டுகளாக கடை நடத்தி வரும் புவனேஸ்வரி,  பெட்டாலிங், சிகாம்புட் ஆகிய இடங்களில் 25 ஆண்டுகளாக கடைநடத்தும் யுவராஜ் ஆகியோரும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

மேலும் ஷாஆலம் வட்டாரத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக 8 கடையை நடத்தி வரும் ராஜேஷ் கண்ணா குப்புசாமி, செனாவாங் தாமான் டேசா பகுதியில் 18 ஆண்டுகளாக இத்தொழிலில் அனுபவம் வாய்ந்த ராஜசூரியன்,  பேரா ஈப்போ மாநிலத்தில் இரண்டாவது தலைமுறையாக கடை நடத்தி வரும்  எழில் அரசன்,  பினாங்கை சேர்ந்த நாகநாதன் கூறுகையில் 60 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறோம். பெங்கிரியான் வேஸ் பகுதியில் 13 ஆண்டுகளாக தொழில் நடத்தி வரும் ஜனகன், ரவாங் வட்டாரத்தை சேர்ந்த தனராஜா உள்ளிட்ட அனைவருமே தங்கள் பிரச்சினைகளையும் வேதனையும் வெளிப்படுத்தினர்.

கடை வாடகை, சம்பளம், குடும்ப செலவுகள் மற்றும் எங்களிடம் பணியாற்றும்  தொழிலாளர்களின் காலாவதியான விசா நீட்டிப்புக்கான செலவுகள் என பல பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தவிக்கிறோம் என்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here