சென்னை அம்பத்தூரில் முககவசம் இல்லாமல் வீணாக சுற்றித் திரிந்த இளைஞர்களை மடக்கிய காவல்துறையினர், அவர்கள் கன்னத்தில் அவர்களே அடித்துக் கொண்டு புத்தி சொல்லும் வினோத தண்டனையை வழங்கி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்
சென்னை கொரோனா தாக்குதலில் நாளுக்கு நாள் சதம் அடித்து உக்கிரமாக மாறிவருகின்றது. ராயபுரம், திருவிக நகர் ஆகிய பகுதிகள் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளன.
இந்த நிலையில் சென்னை அம்பத்தூரில் பொறுப்பில்லாமல் வீதியில் கும்பலாக சுற்றித் திரிந்தவர்களை சுற்றிவளைத்த காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீசார், முககவசம் அணியாமல் மெத்தனமாக சுற்றியவர்களின் புத்தியில் உரைக்கும் வகையில் அவர்களே அவர்களது கன்னத்தில் அறைந்து கொள்ளும் தண்டனையை வழங்கினார் மாஸ்க் அணியாமல் வந்தது தப்புத்தான் என்று அவரவர் கன்னத்தில் மாறி மாறி அடித்துக் கொணடனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால் நோய்த் தொற்று பாதிப்பு குறித்து உணராமல் சுற்றுவோரை பிடித்து போலீசார் உரிய முறையில் கவனித்து அனுப்பினால் மட்டுமே வீட்டுக்குள் முடங்கி இருப்பார்கள். கொரோனா பரவுதலையும் அப்போதுதான் கட்டுக்குள் கொண்டுவர இயலும்.
இல்லையெனில் இதுபோன்ற ஊர் சுற்றிகள் சுதந்திரப் பறவைகளாக சுற்றி, தங்களை அறியாமல் கொரோனாவை சமூகத்தில் பரப்பும் நிலை தொடரவே செய்யும்..!