யாருக்கு ஆக்சிஜன் தேவை என கண்டறிய.. நோயாளிகளின் ஆக்சிஜனை 5 நிமிடம் நிறுத்தினோம்; இந்தியாவில் பயங்கரம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்திலுள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை ஒன்றில், யாருக்கெல்லாம் கண்டிப்பாக ஆக்சிஜனை தேவை என்பதைக் கண்டறிய சுமார் 5 நிமிடங்கள் மருத்துவமனை நிர்வாகமே ஆக்சிஜன் சப்ளேவை நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தைத் தாண்டியிருந்தது.

அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை சென்றது. அந்த காலகட்டத்தில் நிலைமை மிக மோசமாக இருந்தது. மோசமான நிலை நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. ஆக்சிஜன், ரெம்டெசிவிர், படுக்கைகள் என அனைத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. ஒருபுறம் கொரோனாவால் பொதுமக்கள் உயிரிழந்தனர்.

மறுபுறம், தேவையான நேரத்தில் ஆக்சிஜன், படுக்கைகள் கிடைக்காமலும் கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.  ஆக்சிஜன் சப்ளே தற்போது தான் நிலைமை மெல்ல மாறி வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்திலுள்ள புழக்பெற்ற பராஸ் மருத்துவமனையில், கடந்த ஏப்ரல் மாதம், எந்த நோயாளிகளுக்கு எல்லாம் கண்டிப்பாக ஆக்சிஜனை தேவை என்பதைக் கண்டறிய, சுமார் 5 நிமிடங்கள் மருத்துவமனை நிர்வாகமே ஆக்சிஜன் சப்ளேவை நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த மருத்துவமனையின் உரிமையாளர் அரிஞ்சய் ஜெயின் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 26-27 நாட்களில் பராஸ் மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here