கோலாலம்பூர், மே 2-
இரண்டாவது சுற்று கொரொனா பாதிப்பு ஜப்பானுக்கு நேர்ந்தது போல மலேசியாவுக்கும் நேர்ந்து விடும் என மலேசியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக் கொண்டுள்ளார்.
சக்கூரா பூக்கள் காலம் என்பதால் ஹொக்காய்டோ மாவட்டம் சுற்றுலாவுக்காக திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக அதிகமான வெளிநாட்டினர் ஜப்பானுக்குள் நுழைந்தனர்.
இதன் காரணமாகவே ஜப்பான் இரண்டாவது சுற்று கொரோனா பாதிப்பை சந்தித்துள்ளது.
மலேசியா இன்னமும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தி வைத்திருக்கிறது. வெளிநாட்டினர் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் மலேசியா இரண்டாவது கொரோனா சுற்றைச் சந்தித்து விடுமோ என மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.