நீலாய்:
நீலாய் வட்டாரத்தில் கருப்பு நெகிழிப்பை கும்பல் பெருகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோன்பு மாதத்தில் எடுக்க வேண்டிய விரதத்திற்கு மாறாக கருப்பு நெகிழிப்பைகளில் உணவை மறைத்து எடுத்துச் செல்லும் கலாச்சாரம் நீலாய் வட்டாரத்தில் அதிகரித்து வருவதாக புகார் கிடைத்துள்ளது.
கருப்பு நெகிழிப் பை கும்பலின் நடமாட்டம் இருப்பதைக் கண்டால் நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய மன்றத்திடம் புகார் செய்ய வேண்டும் என பிரதமர் துறையின் இஸ்லாமிய சமயப் பிரிவுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்ளி முகமட் அல்பக்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.
புனிதமான நோன்பு மாதத்தில் முழு நோன்பின் மகத்துவத்தை அறிந்திருந்தும் அதனைப் பின்பற்றாத கருப்பு நெகிழிக் கும்பலின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவர் எனவும் அவர் தெரிவித்தார்.