கோலாலம்பூர் :
அந்த 47 நாட்கள் சுகாதார சிறைவாசத்திற்குப் பிறகு, கோவிட் -19 தொற்று பரவுவதைத் தடுக்க அரசாங்கம் விதித்த மக்கள் நடமாட்ட ஆணையின் (எம்.சி.ஓ) புதிய நிபந்தனை இன்று தொடங்கியிருக்கிறது.
மக்களுகுத் தேவையான அத்தியாவசிய விற்பனை நிலையங்கள் தங்கள் வணிகத்தை முன்பு போலவே மீண்டும் தொடங்கியிருக்கின்றன. மக்கள் இப்போது தங்களுக்குப் பிடித்த ‘மாமாக்’ உணவகங்கள் அல்லது பிற உணவு வளாகங்களுக்குச் செல்லலாம், அதே நேரத்தில் நான்கு பேர் வாகனத்திலும் ஒன்றாப் பயணம் செய்யலாம்.
இருப்பினும், மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி மட்டுமே தளர்த்தப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அதன் நான்காவது கட்டத்தின் உண்மையான கடைசி தேதி மே 12 ஆகும் என்று செய்தியாளர் சந்திப்பில், சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையை அரசாங்கம் தளர்த்தியதன் நோக்கம் இப்போது ஹரிராயா கொண்டாட்டந்தான் என்பது தவறான எண்ணமாகும் என்றார் அவர்.
கோவிட் -19 தொற்றைக் குறைக்கச் செய்வதற்கும், சுழியத்திற்குக் கொண்டுவருவதற்கும் அடைவதற்கும் அரசாங்கத்திற்கு உதவுவதற்கான நடைமுறைக்கு (எஸ்ஓபி) மக்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே நோக்கம் என்கிறார் அவர்.
தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு, புதிய நேர்மறை கோவிட் -19 தொற்றுகள் வந்துள்ளன என்பதையும், இரட்டை இலக்க எண்களைப் பதிவுசெய்த 16 நாட்களுக்குப் பிறகு, அந்த எண்ணிக்கை மூன்று இலக்கங்களாகத் திரும்பியுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நிபந்தனைகளை மீறும் நபர்கள் இருந்தால் போலீஸாருக்கு புகார் அளிப்பதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பங்கை ஆற்ற முடியும் என்று மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு அமைச்சகம் உருவாக்கிய மைட்ரேஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார், இது கோவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் அவர்களின் நெருங்கிய தொடர்புகளையும் கண்காணிக்க அரசாங்கத்திற்கு உதவ முடியும்.
நினைவில் வைத்து கொள்ளுங்கள், தொற்றுக்கு எதிரான போராட்டம் இன்னும் முற்றுப் பெறவே இல்லை இன்னும் வெற்றியடயவில்லை. சிறிய சுதந்திரத்திற்காகவும், தற்காலிக மகிழ்ச்சிக்காகவும் 47 நாட்கள் முயற்சி வீணாகிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பதாக மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.