பிரான்சிற்குள் நுழையும் இந்த நாடுகளை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தமாட்டோம்

பிரான்சில் புதிய மசோதா விதிகளின் படி, வெளிநாட்டில் இருந்து வரும் அனைவரும் இனி 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இது பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிற்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 24-ஆம் திகதி முதல் மருத்துவ அவசர நிலை (ஊரடங்கு) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு தற்போது ஜுலை 24-ஆம் திகதி அதாவது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த புதிய மசோதா விதிகளின் படி பிரான்சிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக பிரான்சிற்குள் நுழையும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பாவின் திறந்த எல்லையான ஷெங்கன் பகுதி மற்றும் பிரிட்டனில்  இருந்து வரும் எவரையும் தனிமைப்படுத்த மாட்டோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், ஷெங்கன் பகுதி மற்றும் பிரிட்டனுக்கு வெளியே உள்ள பிற பகுதிகளிலிருந்து பிரான்சிற்கு வரும் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு, விதிகள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சனிக்கிழமை சுகாதார அமைச்சர்  ஆலிவர் வேரன், கட்டாய சுய தனிமைப்படுத்தல் அவசியம் என்றார். திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிரான்சிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்து அனைத்துலக பயணச் சான்றிதழை  அவர்கள் ஒப்படைத்து செல்ல வேண்டும். அது இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்து அதன்பின் அவர்களிடம் வழங்கப்படும்.அ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here