புதிய மாற்றங்களில் தீயணைப்பு வீரர்கள்

புத்ராஜெயா:

எல்லோரையும் போலவே, கோவிட் -19 தொற்றுநோயால் தீயணைப்பு மீட்புத் துறையும் (ஜேபிபிஎம்) புதிய மாற்றங்களில் செயல் பட வேண்டியிருக்கிறது.

கோவிட் -19 காலத்தில்கூட தீ விபத்துகளுக்கு விரைவான பதில், சாலை, உள்நாட்டு, தொழில்துறை, விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது என்பது முன்னுரிமையாக இருக்கும் என்று ஜேபிபிஎம் தலைமை இயக்குநர் டத்தோ முகமது ஹம்டான் வாஹிட் கூறினார்.

ஆனால், தீயணைப்பு வீரர்கள் இன்று புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் அவர்கள் கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இப்போது முன்னணியில் உள்ளனர்.

அவசர காலங்களில், பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றும் போது, பாதிக்கப்பட்டவர் கோவிட் -19 தொற்றுள்ளவரா? இல்லையா? என்பது தெரியாது. எனவே ஒரு சாதாரண அவசரநிலை என்றாலும் கூட ஜேபிபிஎம் குழுவினர் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

அதனால்தான் கோவிட் -19 தொற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு ஜேபிபிஎம் உறுப்பினரும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகள், நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், ஏனெனில் அவர்களின் வேலை முன்பு போல இயல்பானது’ அல்ல.

இப்போது, தீயணைப்பு வீரர்களுக்கு அவசர அழைப்பு வந்தாலும் அல்லது சாதாரண அவசரகால வழக்காக இருந்தாலும் கூட தனிப்பட்ட பிரத்தியேக பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) பயன்படுத்தியே ஆகவேண்டும்.

உதாரணமாக, சாலை விபத்து அல்லது தீயில் சிக்கியவர்களைக் காப்பாற்ற, தீயணைப்பு வீரர்கள் முக கவசங்கள், முகமூடிகள் , கையுறைகளை அணிய வேண்டும்.

அவர்கள் தங்கள் நடவடிக்கைகளுக்கு வெளியே செல்லும்போது சுய-கிருமி நீக்கம் செய்துகொள்ளவேண்டும் வேண்டும். மேலும் தீயணைப்பு நிலைய வளாகத்திலோ அல்லது ஆன்லைனிலோ நடத்தப்படும் தீயணைப்பு பயிற்சி அமர்வுகள் இப்போது சமூக தூரதிற்கானதாக மாறியிருக்கிறது என்றார் டத்தோ முகமது ஹம்டான் வாஹிட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here