வங்கியாளர், வெளிநாட்டு மாணவர் உள்ளிட்ட 17 பேர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: போதைப்பொருள் அடிப்படையிலான வேப் திரவங்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரில் ஒரு வங்கியாளரும் வெளிநாட்டு மாணவரும் அடங்குவர். ஏப்ரல் 29 , 30 ஆகிய தேதிகளில் “ஓப்ஸ் ஸ்லேயர்” என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது RM58,000 மதிப்புள்ள 215 பாட்டில்கள் வேப் திரவத்தை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

ஆரம்ப கட்ட  விசாரணையில் வேப் திரவத்தில் கஞ்சா மற்றும் கெட்டமின் இருப்பது கண்டறியப்பட்டதாக  புக்கிட் அமான் போதைப்பொருள் புலனாய்வுத் துறை (என்சிஐடி) இயக்குநர் டத்தோ ராம்லி  டின் தெரிவித்தார்.

போதைப்பொருளிலான வேப் திரவம் மூன்று ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில் விற்கப்படுகிறது. இதுபோன்ற வேப் திரவங்கள் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம் என்று புக்கிட் அமானில் செவ்வாய்க்கிழமை (மே 5) செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட மற்ற சந்தேக நபர்களில் ஒரு வர்த்தகர் மற்றும் நிரந்தர வசிப்பிட அந்தஸ்துள்ள ஒரு பெண் ஆகியோர் அடங்குவர். வேப் திரவத்திற்கான கொடுப்பனவுகள் ரொக்கப் பணம், ஆன்லைன் என  பல்வேறு வழிகளில் வழங்கப்பட்டிருக்கின்றன விநியோக வலையமைப்பைக் கண்டறிய நாங்கள் மேலும் விசாரித்து வருகிறோம் என்று ராம்லி கூறினார்.

வேப் திரவ விற்பனையில் ஈடுபட்டுள்ள இ-காமர்ஸ் வலைத்தளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.  மார்ச் 18 ஆம் தேதி மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) தொடங்கப்பட்டதிலிருந்து சந்தேக நபர்கள் வேப் திரவத்தை விநியோகிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக ராம்லி தெரிவித்தார்.

ஒரு 30 மில்லி பாட்டில் RM200 மற்றும் RM300 க்கு இடையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார், இந்த வழக்கு ஆபத்தான மருந்துகள் சட்டத்தின் பிரிவு 12 மற்றும் பிரிவு 6 இன் கீழ் விசாரிக்கப்படும்.

இதுபோன்ற தயாரிப்புகளை ஆன்லைனில் வாங்கியவர்கள் தாமாக  முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த சிண்டிகேட்டுகள் செயலிழக்கப்படுவதற்கு முன்னர், 2015 ஆம் ஆண்டில் போதைப்பொருள் அடிப்படையிலான வேப் திரவத்தை விற்பனை செய்யும் போக்கு ஏற்பட்டது” என்று கம் ராம்லி கூறினார். மற்றொரு விஷயத்தில், MCO காலத்தில்  கூத்தும் கும்பாளமாக விருந்துகளில் ஈடுபட்டதற்காக 14 முதல் 40 வயதுக்குட்பட்ட மொத்தம் 346 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். என்சிஐடி கைது வாரண்டுகளின் அடிப்படையில் 130 பேரை நாங்கள் கைது செய்தோம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here