ஜெராக் மலேசியா பதிவுக்கு ஆறு லட்சம் பேர்

கோலாலம்பூர்:
மக்கள் நடமாட்ட கூடல் இடவெளி கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் ஜெராக் மலேசியா விண்ணப்பம் 1.3 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநர் டத்தோ ஹுசிர் முகமட் தெரிவித்துள்லார்.

திங்கள்கிழமை (மே 4 நள்ளிரவு) முதல் அரச மலேசியா காவல்துறை, (பி.டி.ஆர்.எம்) மாநிலங்களுக்கு இடையேயான பயண அனுமதிகளுக்கான 600,000க்கும் மேற்பட்ட கோரிக்கைகளைப் பெற்றன என்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத்துறை குறிப்பிட்டிருக்கிறது.

தங்கள் ஊர்களுக்குத் திரும்ப மே 7 முதல் மே 10 வரை ஒரு சுமுகமான பயணத்தை உறுதி செய்ய காவல்துறை சரியான முறையில் திட்டமிட்டிருக்கிறது.

பயன்பாட்டைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கும், மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கும், பொதுமக்கள் www.gerakmalaysia.gov.my இணைய தளத்தைப் பார்வையிடலாம் என்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார். மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டில் சிக்கித் தவிப்பவர்கள். தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்புவோர் ஜெராக் மலேசியா மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் .

கூடுதலாக, பயனர்கள் மே 7 முதல் பதிவு செய்யுமாறும் ஹுசிர் கேட்டுக்கொண்டார்.
மாநிலங்களுக்கு இடையிலான விண்ணப்பங்களும் முறையாக செய்யப்படலாம், இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரச மலேசிய போலீஸ் பேஸ்புக் பக்கத்திலிருந்து ஒரு படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அல்லது படிவத்தை அருகிலுள்ள காவல் நிலையத்தில் நிரப்ப வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை, 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் ஜெராக் மலேசியா பயன்பாட்டை பதிவிறக்கம் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here